Saturday, July 24, 2010

மேதையான (கி)ராமராஜன்

மேதையான (கி)ராமராஜன்

புதன்கிழமை, 21 ஜூலை 2010 02:32

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றிகளுக்கு சொந்தக்காரார் ராமராஜன். தான் நடிக்கும் ஒரு படத்தின் பாடலில் வந்த ஆபாச வரிகளை ஆட்சேபித்த 'மாபெரும் குற்றத்துக்காக' அதுவரை அவரது படங்களின் வெற்றிகளுக்கு பக்க பலமாக இருந்த ஒரு பிரபலத்தின் கோபத்துக்கு அநியாயமாக ராமராஜன் ஆளாக, அதன்பிறகு அவருக்கு இறங்குமுகம்.

---என்று சாதாரணமாக ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாது . மலை உச்சியில் இருந்து அதலபாதாளத்துக்கு உருண்ட முகம் என்று சொல்வது கூட கம்மிதான்.

நாற்பத்து மூணு படங்களில் கதாநாயகனாக வலம் வந்த ராமராஜன், திடீரென்று தமிழ் சினிமா உலகினின்றும், காற்றில் கரைந்தது போல ஆனார்.

ramarajan-stills032

ஒரு நிலையில் பல படங்களில் அண்ணனாக மாமனாக மச்சானாக நடிக்கக வாய்ப்பு வந்தபோது எல்லாம் மிக சிரமப்பட்ட போதும்கூட அவற்றை மறுத்தவர் ராமராஜன். தவிர எத்தனையோ தொலைக்காட்சி வாய்ப்புகளை மறுத்தவர். அவ்வளவு ஏன்..? புகழ் உச்சியில் இருந்தது முதல் இதுவரை தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் (தான் சார்ந்த கட்சியின் ஜெயா டிவி உட்பட) ஒரு பேட்டி கூட கொடுக்காதவர். 'என் முகத்தை திரையில் காட்டத்தான் தயாரிப்பாளர் எனக்கு சம்பளம் தருகிறார். நான் அதை டிவியில் காட்டினால் அதன் மூலம் சில ரசிகர்களை, திரையரங்குக்குக்குப் போகும் ஆர்வத்தில் இருந்து நான் விலக்கி, தயாரிப்பாளரின் வயிற்றில் அடிப்பதாக அர்த்தமாகிவிடும் ' என்று அறிவித்தவர்.

சரி, இதெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்பவரா நீங்கள்? காரணம் உண்டு.

பீனிக்ஸ் பறவை போல மீண்டிருக்கிறார் ராமராஜன்.

ஆம்!

ramarajan-tamil-actor-photos

கலைமகள் கலைக்கூடம் என்ற நிறுவனம் என்.டி. ஜி. சரவணன் இயக்கத்தில் தயாரித்திருக்கும் படத்தில் மீண்டும் ராமராஜன் கதாநாயகனாக இரண்டாவது ரவுண்டில் குதிக்கிறார் . கௌசிகா என்ற கல்கத்தா பெண் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் ராமராஜனின் சொந்த ஊரான மேலூர் அடங்கிய வெள்ளூர் நாடு என்ற பகுதியில் 32 கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் திருவிழா ஒன்று சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி தீவிலும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ராமராஜனை புதிய கோணத்தில் காட்ட வேண்டுமென்பதற்காக கடலூர் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படத்தில் ராமராஜனுக்கு ஆசிரியர் கதாபாத்திரம். ஆனாலும், என்ன? பாடல் காட்சிகளில் இதுவரை இல்லாத புதுமையாக நவீன உடைகள் நவீன நடனம் என்று புது ஆட்டம் போடுகிறார் ராமராஜன்.

படத்தின் பாடலிசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை பிலிம் சேம்பர் திரையரங்கத்தில் நடந்த போது... என்ன அதிசயம்! வழக்கமாக காஸ்மாபாலிட்டன் குரல்கள் கேட்கும் அந்தப் பகுதி, எதோ கிராமத்து திருவிழா நடக்கும் இடம் போல ஆகியிருந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்டோ, வேன். மூணு சக்கர சைக்கிள் இவற்றில் ஸ்பீக்கர் கட்டி வந்திருந்த (காசுக்கு மாரடிக்க வராமல் நிஜமான பாசத்தோடு வந்திருந்த) ராமராஜன் ரசிகர்கள் பலரால் அதகளப்பட்டது அந்தப் பகுதி.

திரையிடப் பட்ட பாடல்களில் கோட் சூட் கறுப்புக் கண்ணாடி என்று ராமராஜன் நடனம் ஆடுவது கொஞ்சம் (அவருக்கு) புதுசுதான்.

விசி குகநாதன், சார்லி, பார்த்திபன், இயக்குனர் ஹரி என்று பலரும் கலந்து கொண்ட அந்த விழாவில் நடிகர் சார்லி பேசும்போது 'ராமராஜன் எப்பேர்பட்ட மனிதர்! எத்தனை புது தயாரிப்பாளர்களை உருவாக்கியவர். இடையில கஷ்டம் வந்த போதும் அவரு இறங்கிப் போகல. இன்னும் ஏதாவது ஒரு சேனல்ல அவரு படம் ஒளிபரப்பாகிக்கிட்டுதான் இருக்கு.

இப்பல்லாம் எந்தப் படத்தோட பாடலிசை வெளியீட்டு விழானு போனாலும் ஓஓஓஒ ன்னு பத்து நிமிஷம் கத்திட்டு பங்க்ஷன் முடிஞ்சு போச்சு போங்கன்னு சொல்றாங்க. ஆனால் இதுல தினா போட்டிருக்கற ஏழு பாடல்களும் தெளிவா வார்த்தை புரியற மாதிரி இருக்கு. அதுக்காக பாராட்டுகள். படிக்காத மேதை படம் ஹிட்டு. படிக்காதவன் ஹிட்டு. அதனால இந்த மேதை படமும் ஹிட்டு' என்று வித்தியாசமாய்ப் பாராட்டிவிட்டுப் போனார்.

குகநாதன் பேச்சு ரொம்ப ஆழமானது என்றாலும் சில பகுதிகள் மட்டுமே இங்கே உங்களுக்காக

' புரட்சித்தலைவர் எப்படியோ அப்படியே நடிகர்களில் ராமராஜனும்! எம். ஜி. ஆர். மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஏவி.எம்., ஜெமினி வாகினி போன்ற நிறுவனங்களுக்கு ஒரு படமோ இரண்டு படமோ தான் செய்தார். ஆனால், தன்னோடு முப்பத்தைந்து ரூபாய சம்பளத்தில் உடன் நடித்த சின்னப்பா தேவருக்கு இருபது படங்களுக்கு மேல் நடித்துக் கொடுத்தார். சிவாஜி தன்னோடு இருந்த டைலருக்கும் காஸ்டியூமருக்கும் படம் நடித்துக் கொடுத்தார்.

அதன் பிறகு ராமராஜன்தான் எத்தனயோ எளிய மனிதர்களை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தார். பேனர் பின்னால் ஒளிந்து கொள்ளாமல் தன்னை நம்பி பலரை வாழவைத்த இவர்தான் நமது உண்மையான ஆண்மகன்.

அதுவும் ராமராஜன நடித்த படங்கள் எல்லாம் கண்ணியமான, கலாச்சாரம் கெடாத படங்கள், எளியவர்கள் தயாரிப்பாளராக உயர்ந்து படம் எடுத்து, அப்படி சிறு படத்தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் சினிமா வளரும் என்ற உண்மையை தனிமனிதனாக சாதித்துக் காட்டியவர் ராமராஜன். இப்போது சிறு படத் தயாரிப்பாளர்கள் நிலைமை சரியில்லை. எனவே தமிழ் திரையுலகின் நலனுக்காக ராமராஜன் மீண்டும் எழுச்சியுறுவது அவசியமானது. ' என்று கூறிய குகநாதன், 'இங்கே வந்திருக்கும் இயக்குனர் ஹரி ராமராஜனை வைத்து ஒரு படம், இயக்க வேண்டும். அது தமிழ் சினிமாவுக்கே நன்மையாக இருக்கும்' என்று வேண்டுகோள் வைத்து விட்டுப் போனார்.

பார்த்திபன் பேசும்போது ' ராமராஜனுக்கு இங்க இவ்வளவு பெரிய மாலை போட்டாங்களே. அதுல உள்ள ரோஜா இதழ்கள் எல்லாம் உங்களோட இதயங்கள். அதான் உங்க கூட்டத்தைப் போலவே மாலையும் பெருசா இருந்தது.

நாங்க எல்லாரும் அசிஸ்டண்டா கஷ்டப்பட்ட காலத்துல எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு நான் போய் நின்னப்ப, அன்னிக்கே ஐநூறு ரூபாய பணம் கொடுத்தவர் ராமராஜன். சாப்பாட்டு நேரத்துல கரெக்டா அவர் ரூமுக்கு போய் நான் பலமுறை சாப்பிட்டுருக்கேன். அதனால அவரு அன்னிக்கே மக்கள் நாயகனாதான் இருந்தாரு.

மக்கள் நாயகன் என்ற பேர்ல கூட மக்கள் என்ற வார்த்தைதான் முதல்ல வருது. நீங்க இன்னிக்கும் அவருக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவு பிரம்மாதமானது' என்று வியந்தார்.

new-ramarajan-movie-stills-5_720

பலத்த ஆரவாரத்துக்கு இடையே அமைதியாகபேசினார் ராமராஜன். 'நான் சாதரணமான நிலையில இருந்து வந்தவன். நம்மளை மாதிரி சாதாரணமான மனுஷங்களுக்கு கை கொடுப்போம் என்ற எண்ணத்துலதான் என்ன மாதிரி எளிய மனிதர்கள் பலரை தயாரிப்பாளரா ஆக்கினேன். மத்த படி பெரிய தயாரிப்பாளர்கள் படத்துல நடிக்கக் கூடாதுன்னு இல்ல.

ஆனா பெரிய சரிவுகளை சந்திச்சேன். வருஷத்துக்கு எட்டு படம் கொடுத்த நான் கடந்த எட்டு வருஷமா ஒரு படம் கூட கொடுக்கல' என்று கூற

' இல்ல தலைவா.. பத்து வருஷமா படமே தரல' என்று கத்தும் ரசிகரை ஆதுரமாகப் பார்த்துவிட்டு, தொடர்ந்த ராமராஜன், ' ஆனா... இத்தனை வருஷ இடைவெளிக்குப் பின்னாடியும் என்னை மறக்காம இன்னிக்கு இவ்வளவு பேர் என் பின்னாடி இருக்கீங்கன்னா.. நான் என் தாய் தந்தைக்கு கூட உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்ல... உங்களுக்கு உண்மையா இருந்தா போதும்னு நினைக்கிறேன்' என்று சொல்லிவிட்டு மேல பேச முடியாமல், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.

அரங்கமே நெகிழ்ச்சியில் இளகி உறைய 'இந்தப் படம் உங்க எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்' என்று கூறி முடித்தார்.

அப்புறமென்ன... அரங்குக்கு வெளியே மீண்டும் பல்வேறு வாகன ஒலிபெருக்கிகளில், மதுர மருக்கொழுந்து வாசமும் செண்பக வாசமும் மாங்குயில் பூங்குயிலின் குரலும் பெருமையுள்ள பேச்சியின் ஒலியும் கேட்டுக் கொண்டே இருந்தன.

Courtesy_

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

DISCLAIMER

This Blog Spot is meant for publishing Entertainment Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Viewers. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".

Labels

MGR (25) Article (7) Tamil Nadu (7) Wikipedia (7) 2013 (5) Actor (4) Director (4) Enga Veetu Pillai (4) Interview (4) Sivaji Ganesan (4) THE HINDU (4) Tamil Cinema (4) Youtube (4) Chief Minister of Tamil Nadu (3) Facebook (3) Jayalalithaa (3) Pondicherry (3) 100th Birthday (2) Aayirathil Oruvan (2) Actress (2) Comedian (2) Death (2) Dinamalar (2) Manirathnam (2) Ulagam Sutrum Vaaliban (2) தி இந்து (2) 100 Years of Indian Cinema (1) 175th Day (1) 1965 (1) 1977 (1) 2012 (1) 2014 (1) 3 Legends (1) A.V.Meiyappan Chettiar (1) AIADMK (1) AVM (1) Animation Movie (1) Arnold Schwarzenegger (1) B.R.Panthulu (1) Bangra Dance (1) Bommai Magazine (1) California (1) Centenary (1) Centenary Celebrations (1) Coimbatore (1) Colour Film (1) Death Anniversary (1) Dinamani (1) Director B.R.Bandhulu (1) Director Bhagyaraj (1) Enthiren (1) Film (1) Frontline (1) Gemini Ganesan (1) Governor (1) Hari (1) Hindi (1) Hollywood Star (1) Jaya TV (1) K.S.Ravikumar (1) Kaka Radhakrishnan (1) Kamalhassan (1) Kerala (1) Kizhakku Appricavil Raju (1) Kovaithambi (1) Kudiyiruntha Koil (1) Latha (1) M.S.Viswanathan (1) MSV (1) Mannathi Mannan MGR (1) Melodies Songs (1) Movies Lists (1) Muruga movie (1) Music Legend (1) NSK alias N.S.Krishnan (1) Nadodi Mannan (1) Nakkheeran (1) Nayagan (1) Old Songs (1) P.B.Sreenivas (1) PBS (1) Palakkad (1) Playback Singer (1) Poet Vaali (1) Policegiri (1) Rajasulochana (1) Rajni (1) Ramarajan (1) Rickshawkaran (1) Royal Theatre (1) Saamy Movie (1) Saroja Devi (1) Shankar (1) Story (1) Subramaniapuram (1) T.S.Balaiah (1) TAMIL HINDU (1) Tamil Actor (1) Thenkinnam (1) Times of India (1) USA (1) Ulavudurai DIG (1) Vadivelu comedy (1) Veera Pandiya Kattabomman (1) Videos (1) Vijay TV (1) Vijayalakshmi (1) ஆயிரத்தில் ஒருவன் (1) இதயக்கோவில் (1) காகா ராதாகிருஷ்ணன் (1) கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு (1) குடியிருந்த கோயில் (1) தாய் சொல்லைத் தட்டாதே (1) தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் (1) நக்கீரன் (1) பாலையா (1) மணிரத்னம் (1) ராஜசுலோசனா (1)