Wednesday, September 17, 2014

Hollywood star Arnold Schwarzenegger meets Jayalalithaa


Arnold Schwarzenegger meets Jayalalithaa

CHENNAI, September 15, 2014

PTI

Hollywood actor and former Governor of California with Chief Minister Jayalalithaa at the Secretariat in Chennai on Monday, September 15, 2014.
Hollywood action star Arnold Schwarzenegger on Monday met Tamil Nadu Chief Minister Jayalalithaa at the Secretariat

The 67-year-old actor, also the former Governor of California and Ms. Jayalalithaa interacted for nearly half an hour.

The details of the meeting are yet to be known.

Mr. Schwarzenegger, clad in a grey blazer, did not talk to waiting reporters but struck a pose for the shutterbugs and videographers who had come in good numbers.

He also gave a friendly wrap around the shoulders of a policeman on his security duty, drawing instant cheers from the cops and others around.

Eager state government staff also thronged to catch a glimpse of the Terminator star.

Mr. Schwarzenegger is here for the audio launch of director Shankar's mega budget movie, I, starring Vikram and Amy Jackson. Oscar winner AR Rahman has scored the music for the film.


Also read the related stories

தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Published: September 16, 2014 18:49 IST

'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு
'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு

'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு
'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு

'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம்.

ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான்.

அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்கலந்து கொண்டார்.

'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, கேசட் விளம்பரத்தைச் சுற்றிருந்த பேப்பரை கிழித்து அப்படியே கீழே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க, ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர்.

பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.

'ஐ' இசை வெளியீட்டு விழா...

'ஐ' இசை வெளியீட்டு விழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.

இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.

நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.

இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.

'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.

பிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ஆரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா?


Also read the related stories

முதல்வருடன் அர்னால்டு சந்திப்பு: ஆட்டோகிராப் வாங்கிய சூர்யா

சென்னை Published: September 15, 2014 16:17 IST

தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)
தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)

தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)
தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)

தனது ட்விட்டர் பக்கத்தில் அர்னால்ட் பதிவேற்றியுள்ள படங்கள்
தனது ட்விட்டர் பக்கத்தில் அர்னால்ட் பதிவேற்றியுள்ள படங்கள்

தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)
தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)

தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)
தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)

தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)
தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)

தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)
தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)

தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)
தலைமைச் செயலகத்துக்கு வந்த அர்னால்ட் (படம்: சீனிவாசன்)

'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை அர்னால்டு சந்தித்து பேசினார்.

'ஐ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதுகுறித்து நடிகர் அர்னால்டு தனது டிவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அவர் தமிழக அரசின் சாதனைகள் குறித்தும், எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் என்னிடம் விவரித்தார். நடிப்புத்துறைக்குள் இருந்து கவர்னராக அரசியல் துறைக் குள்ளும் நுழைந்த அனுபவம் இருந்ததால், தமிழக முதல்வருடன் உரையாடியது எனக்கு சாதகமான அனுபவமாக இருந்தது'' இவ்வாறு கூறியுள்ளார்.

அர்னால்டு - சூர்யா சந்திப்பு

ஹாங்காங்கில் இருந்து தனி விமானம் மூலம் அதிகாலை 3 மணிக்கு சென்னை வந்தடைந்தார் அர்னால்ட். உடனடியாக அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய் திருந்த சென்னை லீலா பேலஸ் விடுதிக்குப் புறப்பட்டார். அந்த விடுதியில் உள்ள ஜிம்மில்தான் நடிகர் சூர்யா தினசரி உடற் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

எதேச்சையாக அந்த நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற் காக நடிகர் அர்னால்டு வந்துள்ளார். அவரிடம் நடிகர் சூர்யாவை படத் தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு அறிமுகப் படுத்தினார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட் டனர். உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வது தொடர்பான சில குறிப்புகளை சூர்யாவுக்கு அர்னால்டு கூறியதாக தெரிகிறது. அதன்பின் நடிகர் சூர்யா தனது வீட்டிலிருந்து கொண்டுவரச் சொன்ன அர்னால்டு எழுதிய 'அர்னால்டு பாடிபில்டிங் ஃபார் மென் ' புத்தகத்தை அவரிடம் காட்டி 'தனக்கு மிகவும் பிடித்த புத்தகம்' என்று கூறி நடிகர் சூர்யா கையெழுத்து வாங்கிக் கொண்டார்.


Also read the related stories


TN Press Release about the Hollywood actor Mr. Arnold Schwarzenegger called on the Hon'ble Chief Minister


Also read the related stories


Hollywood action star Arnold Schwarzenegger Facebook Page 


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

DISCLAIMER

This Blog Spot is meant for publishing Entertainment Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Viewers. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".

Labels

MGR (25) Article (7) Tamil Nadu (7) Wikipedia (7) 2013 (5) Actor (4) Director (4) Enga Veetu Pillai (4) Interview (4) Sivaji Ganesan (4) THE HINDU (4) Tamil Cinema (4) Youtube (4) Chief Minister of Tamil Nadu (3) Facebook (3) Jayalalithaa (3) Pondicherry (3) 100th Birthday (2) Aayirathil Oruvan (2) Actress (2) Comedian (2) Death (2) Dinamalar (2) Manirathnam (2) Ulagam Sutrum Vaaliban (2) தி இந்து (2) 100 Years of Indian Cinema (1) 175th Day (1) 1965 (1) 1977 (1) 2012 (1) 2014 (1) 3 Legends (1) A.V.Meiyappan Chettiar (1) AIADMK (1) AVM (1) Animation Movie (1) Arnold Schwarzenegger (1) B.R.Panthulu (1) Bangra Dance (1) Bommai Magazine (1) California (1) Centenary (1) Centenary Celebrations (1) Coimbatore (1) Colour Film (1) Death Anniversary (1) Dinamani (1) Director B.R.Bandhulu (1) Director Bhagyaraj (1) Enthiren (1) Film (1) Frontline (1) Gemini Ganesan (1) Governor (1) Hari (1) Hindi (1) Hollywood Star (1) Jaya TV (1) K.S.Ravikumar (1) Kaka Radhakrishnan (1) Kamalhassan (1) Kerala (1) Kizhakku Appricavil Raju (1) Kovaithambi (1) Kudiyiruntha Koil (1) Latha (1) M.S.Viswanathan (1) MSV (1) Mannathi Mannan MGR (1) Melodies Songs (1) Movies Lists (1) Muruga movie (1) Music Legend (1) NSK alias N.S.Krishnan (1) Nadodi Mannan (1) Nakkheeran (1) Nayagan (1) Old Songs (1) P.B.Sreenivas (1) PBS (1) Palakkad (1) Playback Singer (1) Poet Vaali (1) Policegiri (1) Rajasulochana (1) Rajni (1) Ramarajan (1) Rickshawkaran (1) Royal Theatre (1) Saamy Movie (1) Saroja Devi (1) Shankar (1) Story (1) Subramaniapuram (1) T.S.Balaiah (1) TAMIL HINDU (1) Tamil Actor (1) Thenkinnam (1) Times of India (1) USA (1) Ulavudurai DIG (1) Vadivelu comedy (1) Veera Pandiya Kattabomman (1) Videos (1) Vijay TV (1) Vijayalakshmi (1) ஆயிரத்தில் ஒருவன் (1) இதயக்கோவில் (1) காகா ராதாகிருஷ்ணன் (1) கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு (1) குடியிருந்த கோயில் (1) தாய் சொல்லைத் தட்டாதே (1) தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் (1) நக்கீரன் (1) பாலையா (1) மணிரத்னம் (1) ராஜசுலோசனா (1)