Sunday, August 24, 2014

100th Birthday for actor T.S.Balaiah


டி. எஸ். பாலையா

பிறப்பு: ஆகஸ்ட் 23, 1914

இறப்பு: ஜூலை 22, 1972 (அகவை 57)

டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

அவரின் புகழ்பெற்ற பிற படங்கள்

வேலைக்காரி (1949)
உத்தம புத்திரன் (1940)
ஆர்யமாலா (1941)
மனோன்மணி (1942)
மீரா (திரைப்படம்) (1945)
வால்மீகி (1946)
மோகினி (1948)
ஏழை படும்பாடு (1950)
ஓர் இரவு (1951)
மதுரை வீரன் (1956)
பாகப்பிரிவினை (1959)
திருவிளையாடல் (திரைப்படம்) (1965)
பாமா விஜயம் (1967)
தில்லானா மோகனாம்பாள்

"அசோகர் உங்க மகரா"

இன்று (23-08-2014) நடிகர் T S பாலையாவின் 100ஆவது பிறந்த நாள். அத்துடன் 16-08-2014 அன்று காதலிக்க நேரமில்லையின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா. 

இரண்டையும் நினவு கூரும் வகையில், ஒரு சிறிய FLASHBACK.

T S பாலையா, M K ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார் நடத்திய கம்பெனி என்ற நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். அந்த குழு மூடப்பட்டதும் கந்தசாமி முதலியார்.தான் திரைக்கதை வசனம் எழுதி தன மகன் M K ராதா நடித்த சதி லீலாவதி என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் இயக்குனர் எல்லிஸ் R டன்கனுக்கு அவரை மிகவும் பிடித்து போய் விட அவரது மற்ற படம்களில் வாய்ப்ப்ளித்தார். 

அம்பிகாபதி படத்தில் செய்த வில்லன் வேடம் இவருக்குப பெயரைப் பெற்று தந்தது. அதன் பிறகு இவரது திரை வாழ்கையில் பின்னடைவு இல்லை. அவரது படங்களிலிருந்து சில திரைத்துளிகள். நான் சிலவற்றி மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன், மற்ற நண்பர்களும் தங்களது பதிவுகளை கருத்துப் பெட்டியில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

மதுரை வீரன் - "இன்று என்ன கிழமை? வெள்ளிக்கிழமை".

"ஆஹா வெள்ளிக்கிழமை நான் கத்தியைத் தொடமாட்டேனே". 

"மன்னா நாங்கள் பின் தொடர்ந்து போனோமா,அவர்கள் முன் தொடர்ந்து போய் விட்டார்கள்".

தூக்கு தூக்கி - "அரே பியாரி, நிம்மள் மேலே நம்மள் கி மஜா".

தில்லானா மோகனாம்பாள் - C K சரஸ்வதியிடம் ஓடும் ரயிலில் "என்ன அங்கே அங்க ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு".

நாகேஷிடம் "டேய் சுவரொட்டிப் (பல்லி) பயலே".

"அந்த நரம்பு பயலை வார் பிடிக்கணும்".

"எனக்கு அங்க ஒரு பீடாக் கடைக் காரனைத் தெரியும்".

திருவிளையாடல் - "என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை".

ஊட்டி வரை உறவு - "திருப்பதி அய்யா திருப்பதி கொஞ்ச நாளா எனக்கு நேரம் சரியில்ல யார் பாத்தாலும் அப்பா அப்பான்னு கூப்பிடறாங்க".

"என் நண்பன் நச்சினார்க்கினியசிவம் ப்ரோனோட்டு எழுதிக் குடுத்தா வட்டியப் புடிச்சுக்கிட்டு குடுப்பான் அவ்வளவு தர்மிஷ்டன்".


காதலிக்க நேரமில்லை 50 ஆம் வருட ஸ்பெஷல்

"அசோகர் உங்க மகரா"

அவர்கிட்ட இருக்குற பணம் பாருடா அள்ளினாலும் குறையாதுடா "சமுத்திரம் சமுத்திரம் ".

"கம்பி தங்க தம்பி.ஒரு பொண்ணு உள்ள கண்ணா வேண்டாம்பா பயமா இருக்கு".

" நாகேஷ் -:அப்பா,என் படத்துல ஒரு சீன்.அப்பன் மகன வீட்டவிட்டு தொரத்துரான்! .

பாலய்யா -:"இப்பிடியே சொல்லிக்கிட்டிருந்தா நம்மவீட்டுல நடக்கத்தாண்டா போகுது!".

நாகேஷிடம் - "உன்னைப் புள்ளையாப் பெத்தேனே, என் புத்திய ஜோட்டால அடிச்சுக்கணும் ".

நாகேஷ் - இல்லை நான் கேக்கரேன் உங்களுக்கு மகனா பொறந்தேனே என் புத்திய எதால அடிச்சுக்கறது".

"நான் அடிச்ச்சிப் போட்டதை எடுத்து அடிச்சுக்கோ அடிச்சுக்கோ".

"வேண்டாம்பா, ஊருக்குள்ள செருப்பால அடிபட்ட குடும்பம்னு பேர் வந்துடும்".

Sources: 





Related Posts Plugin for WordPress, Blogger...

DISCLAIMER

This Blog Spot is meant for publishing Entertainment Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Viewers. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".

Labels

MGR (21) Article (7) Tamil Nadu (7) 2013 (5) Wikipedia (5) Actor (4) Director (4) Enga Veetu Pillai (4) Interview (4) Sivaji Ganesan (4) THE HINDU (4) Tamil Cinema (4) Youtube (4) Chief Minister of Tamil Nadu (3) Jayalalithaa (3) Pondicherry (3) 100th Birthday (2) Actress (2) Comedian (2) Death (2) Dinamalar (2) Manirathnam (2) Ulagam Sutrum Vaaliban (2) தி இந்து (2) 100 Years of Indian Cinema (1) 175th Day (1) 1965 (1) 1977 (1) 2012 (1) 2014 (1) 3 Legends (1) A.V.Meiyappan Chettiar (1) AIADMK (1) AVM (1) Aayirathil Oruvan (1) Arnold Schwarzenegger (1) B.R.Panthulu (1) Bangra Dance (1) Bommai Magazine (1) California (1) Centenary (1) Centenary Celebrations (1) Coimbatore (1) Death Anniversary (1) Dinamani (1) Director Bhagyaraj (1) Enthiren (1) Facebook (1) Frontline (1) Gemini Ganesan (1) Governor (1) Hari (1) Hindi (1) Hollywood Star (1) Jaya TV (1) K.S.Ravikumar (1) Kaka Radhakrishnan (1) Kamalhassan (1) Kerala (1) Kovaithambi (1) Kudiyiruntha Koil (1) Latha (1) M.S.Viswanathan (1) MSV (1) Mannathi Mannan MGR (1) Melodies Songs (1) Movies Lists (1) Muruga movie (1) Music Legend (1) NSK alias N.S.Krishnan (1) Nadodi Mannan (1) Nakkheeran (1) Nayagan (1) Old Songs (1) P.B.Sreenivas (1) PBS (1) Palakkad (1) Playback Singer (1) Poet Vaali (1) Policegiri (1) Rajasulochana (1) Rajni (1) Ramarajan (1) Rickshawkaran (1) Royal Theatre (1) Saamy Movie (1) Saroja Devi (1) Shankar (1) Story (1) Subramaniapuram (1) T.S.Balaiah (1) TAMIL HINDU (1) Tamil Actor (1) Thenkinnam (1) Times of India (1) USA (1) Ulavudurai DIG (1) Vadivelu comedy (1) Veera Pandiya Kattabomman (1) Videos (1) Vijay TV (1) Vijayalakshmi (1) ஆயிரத்தில் ஒருவன் (1) இதயக்கோவில் (1) காகா ராதாகிருஷ்ணன் (1) குடியிருந்த கோயில் (1) தாய் சொல்லைத் தட்டாதே (1) தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் (1) நக்கீரன் (1) பாலையா (1) மணிரத்னம் (1) ராஜசுலோசனா (1)