Wednesday, January 31, 2018

MGR Film career


எம்.ஜி.ஆர் திரைப்பட வாழ்க்கை

எம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்

1. நாடோடி மன்னன்
2. ஆசை முகம்
3. ராஜா தேசிங்கு
4. நினைத்ததை முடிப்பவன்
5. எங்கவீட்டுப் பிள்ளை
6. கலை அரசி
7. பட்டிக்காட்டு பொன்னையா
8. மாட்டுக்கார வேலன்
9. அடிமைப் பெண்
10. நீரும் நெருப்பும்
11. நாளை நமதே
12. நேற்று இன்று நாளை
13. உலகம் சுற்றும் வாலிபன்
14. ஊருக்கு உழைப்பவன்
15. அரசிளங்குமரி
16. சிரித்து வாழ வேண்டும்
17. குடியிருந்த கோயில்

நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்

1. 29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். உப தலைவர்.

2. 14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.

3. 1953-ல் உப தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்.

4. 1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்.

5. 1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.

6. மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.

7. அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

திரையுலக புரட்சி

1. விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "கலை அரசி".

2. தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்" - திருவண்ணாமலை, "எங்க வீட்டுப் பிள்ளை".

3. மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)

4. அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழின் முதல் வண்ண படமாகும்.

5. 'மர்மயோகி' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்.

6. 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. 


Also visit the related links

1. எம். ஜி. ஆர். திரை வரலாறு: https://ta.wikipedia.org

2. M.G.R. Filmography: https://en.wikipedia.org

நம் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்

1) சதிலீலாவதி (28-03-1936)

2) இரு சகோதரர்கள் (1936)

3) தட்சயக்ஞம் (31-03-1938)

4) வீர ஜெகதீஷ் (1938)

5) மாயா மச்சீந்திரா (22-04-1939)

6) பிரகலாதா (12-12-1939)

7) வேதவதி (அல்லது) சீத ஜனனம் (22-02-1941)

8)அசோக்குமார் (10-07-1941)

9) தமிழ் அறியும் பெருமாள் (30-04-1942)

10) ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் (03-03-1943)

11) ஹரிச்சந்திரா (14-01-1944)

12) சாலிவாகனன் (16-02-1945)

13) மீரா (03-11-1945)

14) ஸ்ரீமுருகன் (04-06-1946)

15) ராஜகுமாரி (11-04-1947)

16) பைத்தியக்காரன் (26-09-1947)

17) அபிமன்யூ (06-05-1948)

18) ராஜமுக்தி (09-10-1948)

19) மோகினி (31-10-1948)

20) ரத்னகுமார் (15-12-1949)

21) மருதநாட்டு இளவரசி (02-04-1950)

22) மந்திரி குமாரி (24-06-1950)

23) மர்ம யோகி (02-02-1951)

24) ஏக்தா ராஜா (ஹிந்தி) (15-06-1951)

25) சர்வாதிகாரி (14-09-1951)

26) சர்வாதிகாரி (தெலுங்கு) (05-10-1951)

27) அந்த மாண் கைதி (14-03-1952)

28) குமாரி (11-04-1952)

29) என் தங்கை (31-05-1952)

30) நாம் (05-03-1953)

31) ஜெனோவா (மலையாளம்) (1953)

32) பணக்காரி (1953)

33) ஜெனோவா (தமிழ்) (1953)

34) மலைக்கள்ளன் (22-07-1954)

35) கூண்டுக்கிளி (26-08-1954)

36) குலேபகாவலி (29-07-1955)

37) அலிபாபாவும் 40 திருடர்களும் (14-01-1956)

38) மதுரை வீரன் (13-04-1956)

39) தாய்க்குப் பின் தாரம் (21-09-1956)

40) சக்ரவர்த்தி திருமகள் (18-01-1957)

41) ராஜராஜன் (26-04-1957)

42) புதுமை பித்தன் (02-08-1957)

43) மகாதேவி (22-11-1957)

44) நாடோடி மன்னன் (22-08-1958)

45) தாய் மகளுக்குக் கட்டிய தாலி (31-12-1959)

46) பாக்தாத் திருடன் (06-05-1960)

47) ராஜாதேசிங்கு (02-09-1960)

48) மன்னாதி மன்னன் (19-10-1960)

49) அரசிளங்குமரி (01-01-1961)

50) திருடாதே (23-03-1961)

51) சபாஷ் மாப்பிளே (14-07-1961)

52) நல்லவன் வாழ்வான் (31-08-1961)

53) தாய் சொல்லைத் தட்டாதே (07-11-1961)

54) ராணி சம்யுக்தா (14-01-1962)

55) மாடப்புறா (16-02-1962)

56) தாயைக் காத்த தனயன் (13-04-1962)

57) குடும்பத் தலைவன் (15-08-1962)

58) பாசம் (31-08-1962)

59) விக்கிரமாதித்தன் (27-10-1962)

60) பணத்தோட்டம் (11-01-1963)

61) கொடுத்து வைத்தவள் (09-02-1963)

62) தர்மம் தலைக் காக்கும் (22-02-1963)

63) கலை அரசி (19-04-1963)

64) பெரிய இடத்துப் பெண் (10-05-1963)

65) அனந்த ஜோதி (28-06-1963)

66) நீதிக்குப் பின் பாசம் (15-08-1963)

67) காஞ்சித் தலைவன் (26-10-1963)

68) பரிசு (15-11-1963)

69) வேட்டைக்காரன் (14-01-1964)

70) என் கடமை (13-03-1964)

71) பணக்காரக் குடும்பம் (24-04-1964)

72) தெய்வத்தாய் (18-07-1964)

73) தொழிலாளி (25-09-1964)

74) படகோட்டி (03-11-1964)

75) தாயின் மடியில் (18-12-1964)

76) எங்க வீட்டுப் பிள்ளை (14-01-1965)

77) பணம் படைத்தவன் (27-03-1965)

78) ஆயிரத்தில் ஒருவன் (09-07-1965)

79) கலங்கரை விளக்கம் (28-08-1965)

80) கன்னித்தாய் (10-09-1965)

81) தாழம் பூ (23-10-1965)

82) ஆசை முகம் (10-12-1965)

83) அன்பே வா (14-01-1966)

84) நான் ஆணையிட்டால் (04-02-1966)

85) முகராசி (18-02-1966)

86) நாடோடி (14-04-1966)

87) சந்திரோதயம் (27-05-1966)

88) தாலி பாக்கியம் (27-08-1966)

89) தனிப் பிறவி (16-09-1966)

90) பறக்கும் பாவை (11-11-1966)

91) பெற்றால்தான் பிள்ளையா (09-12-1966)

92) தாய்க்குத் தலைமகன் (13-01-1967)

93) அரசக்கட்டளை (19-05-1967)

94) காவல்காரன் (07-09-1967)

95) விவசாயி (01-11-1967)

96) ரகசிய போலீஸ் 115 (11-01-1968)

97 தேர்த்திருவிழா (23-02-1968)

98) குடியிருந்த கோவில் (05-03-1968)

99) கண்ணன் என் காதலன் (25-04-1968)

100) புதிய பூமி (27-06-1968)

101) கணவன் (15-08-1968)

102) ஒளி விளக்கு (20-09-1968) --> தமிழில் நூறாவதாக(100) வெளிவந்த படம்

103) காதல் வாகனம் (21-10-1968)

104) அடிமைப்பெண் (01-05-1969)

105) நம்நாடு (07-11-1969)

106) மாட்டுக்கார வேலன் (14-01-1970)

107) என் அண்ணன் (21-05-1970)

108) தலைவன் (24-07-1970)

109) தேடி வந்த மாப்பிள்ளை (29-08-1970)

110) எங்கள் தங்கம் (09-10-1970)

111) குமரிக் கோட்டம் (26-01-1971)

112) ரிக்க்ஷாக்காரன் (29-05-1971)

113) நீரும் நெருப்பும் (18-10-1971)

114) ஒரு தாய் மக்கள் (09-12-1971)

115) சங்கே முழங்கு (04-02-1972)

116) நல்ல நேரம் (10-03-1972)

117) ராமன் தேடிய சீதை (13-04-1972)

118) நான் ஏன் பிறந்தேன் (09-06-1972)

119) அன்ன மிட்ட கை (15-09-1972)

120) இதய வீணை (20-10-1972)

121) உலகம் சுற்றும் வாலிபன் (11-05-1973)

122) பட்டிக்காட்டுப் பொன்னையா (10-08-1973)

123) நேற்று இன்று நாளை (12-07-1974)

124) உரிமைக்குரல் (07-01-1974)

125) சிரித்து வாழ வேண்டும் (30-11-1974)

126) நினைத்ததை முடிப்பவன் (09-05-1975)

127) நாளை நமதே (04-07-1975)

128) இதயக்கனி (22-08-1975)

129) பல்லாண்டு வாழ்க (31-10-1975)

130) நீதிக்குத் தலைவணங்கு (18-03-1976)

131) உழைக்கும் கரங்கள் (23-05-1976)

132) ஊருக்குப் உழைப்பவன் (12-11-1976)

133) நவரத்தினம் (05-03-1977)

134) இன்று போல் என்றும் வாழ்க (05-05-1977)

135) மீனவ நண்பன் (14-08-1977)

136) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (14-01-1978)

137) அவசர போலீஸ் 100

138) நல்லதை நாடு கேட்கும்

Sources: https://www.facebook.com

Sunday, January 28, 2018

All about MGR Colour Film

திரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாக நிகழ்கின்றன. 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’

சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.

விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’

ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட  ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.

ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’.

சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக்ஷாக்காரன்’.

தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.

இதில் என்ன ஒரு பெருமை எனில், எல்லா படங்களிலும் கதாநாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

இதில் எம் ஜி ஆர் அவர்களின் முதல் படத்தின் கதையை எழுதியவர் S. S. வாசன்அ வரது படத்தயாரிப்பு நிறுவனமான ஜெமினியின் 100வது படம் ஒளி விளக்கு. மது, புகைப்பழக்கம் இல்லாத புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தப் படத்தில் மதுவின் தீமையை உணர்த்த ஒரு பாடலில் மது அருந்தியது போல நடித்திருப்பார்.

ஐந்து தோற்றங்களில் அவர் தோன்றிய இந்தப் பாடல் டெக்னாலஜி வளராத 1968 களில் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் காட்சியில் காலை முதல் இரவு வரை சிரமப்பட்டு நடித்த எம் ஜி ஆர் களைப்பாக இருந்ததால், "ரஷ் பார்த்து சொல்லுங்கள், குறை இருந்தால் வந்து நடித்து கொடுக்கிறேன்" என்று சொல்லி வீடு திரும்பி விட்டாராம்.

இரவு ரஷ் பார்ந்த படக்குழுவினர் காட்சி நன்றாக வந்துள்ளதாக எம் ஜி ஆர் வீட்டுக்கு போன் செய்து சொன்ன போது, அங்கேயே வீட்டுக்கு செல்லாமல் பின் வரிசையில் அமர்ந்திருந்தாராம் எம் ஜி ஆர்.அவ்வளவு ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்திருந்தார் எம் ஜி ஆர். இப்படத்தில் தான் நடிகர் வி.எஸ்.ராகவன் எம் ஜி ஆருடன் முதன் முதல் இணைந்து நடித்திருந்தார்.

ஒளி விளக்கு படத்திலிருந்து டி.எம்.செளந்திரராஜன் குரலில், விஸ்வநாதன் இசை அமைக்க பாடலை எழுதியவர் வாலி.

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா
இல்லை, நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்.
மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்.


MGR received Rs.101/- as Advance in Aayirathil Oruvan Movie


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக புரட்சித்தலைவருக்கு இயக்குநர் பி.ஆர்.பந்துலு அவர்கள் கொடுத்த முன்பணம் ரூபாய் 101/-

பி.ஆர்.பந்துலு அவர்களின் மகளும், இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பி.ஆர். விஜயலட்சுமி இதை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

புரட்சித்தலைவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக முன்பணமாக ஒரு ரூபாய் வாங்கினார் என்ற தகவல் தவறு. 

உடனே முன்பணம் கொடுங்கள் என்று புரட்சித்தலைவர் கேட்க, அவ்வளவு பணம் எடுத்து வரவில்லை என பந்துலு சொல்ல அதற்கு புரட்சித்தலைவர் கையில் இருப்பதை கொடுங்கள் என வற்புறுத்த, பந்துலு அவர்கள் தன் சட்டை பையிலிருந்து 101 ரூபாய் கவரில் போட்டு கொடுத்தார். 

ஐந்து இருபது ரூபாய் நோட்டு ஒரு ஒரு ரூபாய் நோட்டு அதை புரட்சித்தலைவர் இறக்கும் வரை அப்படியே வைத்திருந்தார். புரட்சித்தலைவர் இறந்த பிறகு அதை ஜானகியம்மாள் பந்துலுவின் மகள் விஜயலட்சுமியிடம் கொடுக்க அவர் அதை விஜய் டிவி நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அட்வான்ஸாக வாங்கிய அந்த ஐந்து இருபது ருபாய் நோட்டுக்களை காட்டினார். இந்த தகவல் விஜயலட்சுமி அவர்களே கூறியது.


Thursday, January 18, 2018

Kizhakku Appricavil Raju - MGR First Animation Movie






கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு - Kizhakku Appricavil Raju

உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.

அனிமேஷன் தொழில் நுட்பத்தில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றவர். அவர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை தயாரித்து நடிக்க திட்டமிட்டார். ஆனால், அவருடைய அந்த கனவு நனவாகவில்லை.

எம்.ஜி.ஆர். திட்டமிட்டு நடக்காத அந்த படத்தை, தற்போது வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகனுமான ஐசரி கணேஷ் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர்.தான் நடிக்கிறார். எப்படியெனில், அமெரிக்காவில் அனிமேஷன் தொழில் நுட்பத்தின் மூலம் எம்.ஜி.ஆரையே நடிக்க வைப்பதுபோல, இந்த படம் தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகி யார்? என்பது குறித்து அடுத்த ஒருமாதத்தில் ஐசரி கணேஷ் அறிவிக்க இருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் ஐசரி கணேஷின் தகப்பனாரும், எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவருமான ஐசரி வேலன் நடிப்பது மிகவும் சிறப்புக்குரியது.

அனிமேஷன் படத்தின் கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்பை எம்.அருள்மூர்த்தி ஏற்றுக்கொண்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து திரைப்பட பாடல்கள் எழுதுகிறார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை ராக்கி ராஜேஷ் வடிவமைக்கிறார். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடனக் காட்சிகளை அமைக்கிறார்.

தொடக்கவிழா

இந்த படத்தின் தொடக்கவிழா நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியான பழைய சத்யா ஸ்டூடியோவில் நடக்கிறது.

இதுகுறித்து ஐசரி கணேஷ், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறும்போது, ‘என் தந்தை ஐசரி வேலன் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். என் தந்தையும், எம்.ஜி.ஆரைத்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்து வாழ்ந்தவர். 

அப்படிப்பட்ட புரட்சித்தலைவர் கனவு நனவாகாமல் போய்விடக்கூடாது என்ற வகையில், அதை நனவாக்கும் வகையில் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தை நான் தயாரிக்கிறேன். 

அனிமேஷன் தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது. இது தமிழ் திரைப்பட வரலாற்றில் யாரும் தயாரிக்காத ஒரு முயற்சியாகும். இந்த படம் நிச்சயமாக பார்ப்பவர்களை பிரமிக்கச்செய்யும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற எனது நிறுவனமும், நடிகர் பிரபுதேவா ஸ்டூடியோவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. 

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளான நாளை இந்த படத்தின் தொடக்கவிழா நடக்கிறது. 102-வது பிறந்த நாளான 17.1.2019 அன்று இந்த படம் உலகம் முழுவதிலும் வெளியிடப்படும். 

தொடக்க விழா பூஜைக்கு திரைப்பட உலக பிரமுகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மேற்கண்டவாறு ஐசரி கணேஷ் கூறினார். 





எம். ஜி. ஆர். திரை வரலாறு: https://ta.wikipedia.org

M. G. Ramachandran filmography: https://en.wikipedia.org

Related Posts Plugin for WordPress, Blogger...

DISCLAIMER

This Blog Spot is meant for publishing Entertainment Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Viewers. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".

Labels

MGR (25) Article (7) Tamil Nadu (7) Wikipedia (7) 2013 (5) Actor (4) Director (4) Enga Veetu Pillai (4) Interview (4) Sivaji Ganesan (4) THE HINDU (4) Tamil Cinema (4) Youtube (4) Chief Minister of Tamil Nadu (3) Facebook (3) Jayalalithaa (3) Pondicherry (3) 100th Birthday (2) Aayirathil Oruvan (2) Actress (2) Comedian (2) Death (2) Dinamalar (2) Manirathnam (2) Ulagam Sutrum Vaaliban (2) தி இந்து (2) 100 Years of Indian Cinema (1) 175th Day (1) 1965 (1) 1977 (1) 2012 (1) 2014 (1) 3 Legends (1) A.V.Meiyappan Chettiar (1) AIADMK (1) AVM (1) Animation Movie (1) Arnold Schwarzenegger (1) B.R.Panthulu (1) Bangra Dance (1) Bommai Magazine (1) California (1) Centenary (1) Centenary Celebrations (1) Coimbatore (1) Colour Film (1) Death Anniversary (1) Dinamani (1) Director B.R.Bandhulu (1) Director Bhagyaraj (1) Enthiren (1) Film (1) Frontline (1) Gemini Ganesan (1) Governor (1) Hari (1) Hindi (1) Hollywood Star (1) Jaya TV (1) K.S.Ravikumar (1) Kaka Radhakrishnan (1) Kamalhassan (1) Kerala (1) Kizhakku Appricavil Raju (1) Kovaithambi (1) Kudiyiruntha Koil (1) Latha (1) M.S.Viswanathan (1) MSV (1) Mannathi Mannan MGR (1) Melodies Songs (1) Movies Lists (1) Muruga movie (1) Music Legend (1) NSK alias N.S.Krishnan (1) Nadodi Mannan (1) Nakkheeran (1) Nayagan (1) Old Songs (1) P.B.Sreenivas (1) PBS (1) Palakkad (1) Playback Singer (1) Poet Vaali (1) Policegiri (1) Rajasulochana (1) Rajni (1) Ramarajan (1) Rickshawkaran (1) Royal Theatre (1) Saamy Movie (1) Saroja Devi (1) Shankar (1) Story (1) Subramaniapuram (1) T.S.Balaiah (1) TAMIL HINDU (1) Tamil Actor (1) Thenkinnam (1) Times of India (1) USA (1) Ulavudurai DIG (1) Vadivelu comedy (1) Veera Pandiya Kattabomman (1) Videos (1) Vijay TV (1) Vijayalakshmi (1) ஆயிரத்தில் ஒருவன் (1) இதயக்கோவில் (1) காகா ராதாகிருஷ்ணன் (1) கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு (1) குடியிருந்த கோயில் (1) தாய் சொல்லைத் தட்டாதே (1) தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் (1) நக்கீரன் (1) பாலையா (1) மணிரத்னம் (1) ராஜசுலோசனா (1)